15 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமடைய செய்த தந்தை

செய்திகள்

15 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமடைய செய்த தந்தையொருவரை ரத்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாகவுள்ள நிலையில், அவரின் தாய் காவல் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்டத்தின் பூஸா – பாவர பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருபவரென விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் வெவ்வேறாக பிரிந்து, வசித்து வருகின்றனர். இந்நிலையில், சிறுமி தினந்தோறும் தேநீர் கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இந்நபர் சுமார் ஒரு வருடகாலமாக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

44 வயதான குறித்த சந்தேக நபர் 4 பிள்ளைகளின் தந்தை என்பதுடன், குறித்த சிறுமியின் தாய் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Posts