கிளிநொச்சி வைத்தியசாலைக்கு டயாலிசிஸ் உபகரணம் அன்பளிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 2,320,000 ரூபா பெறுமதி வாய்ந்த டயாலிசிஸ் (Dialysis Machine) ஐக்கிய மக்கள் சக்தியினால் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சரவணபவனிடம் இந்த உபகரணம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட அக்கட்சியின் மேலும் பல உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், டி.சித்தார்தன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக “ஜன சுவய” கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும், சமூக நலத்திட்டத்தின் 16 ஆவது கட்டமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு இந்த மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டுள்ளது.

Trending Posts