வவுனியாவிலும் இனி பி.சி.ஆர் பரிசோதனை செய்யலாம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

வவுனியா மாவட்டத்திற்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்ச்சியை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் ஆகியோர் வவுனியா மாவட்டத்திற்கான PCR இயந்திரத்தின் அவசர தேவை தொடர்பில் எடுத்துரைத்திருந்தனர்.

குறித்த சந்திப்பை அடுத்து துறைசார் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி விரைவில் பிசிஆர் இயந்திரமொன்றை வவுனியாவிற்கு வழங்கும்படி பணிப்புரை விடுத்திருந்தார்.

முன்பதாக வவுனியா மாவட்டத்துக்கான பி.சி.ஆர் இயந்திரத்தை வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கொள்வனவுசெய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த இந்நிலையிலேயே குறித்த இயந்தரத்தை வழங்கவதற்கு சுகாதார அமைச்சர் இன்றையதினம் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts