ரணில் இன்று நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

செய்திகள்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்க்கு இன்று வருகின்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தை ரணில் விக்கிரமசிங்க பெற்று இன்று புதன்கிழமை காலை நாடாளுமன்ற உறுப்பினரானப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

நாடாளுமன்றம் கூடிய பின்னர் சபாநாயகரின் விசேட அறிவிப்பையடுத்து நாடாளுமன்றத்தில் உள்ள அக்கிராசனத்திற்கு வலதுபுறத்தில் நின்றபடி ரணில் தனது பதவிப்பிரமாணத்தை சபாநாயகருக்கு முன்பாக செய்யவுள்ளார்.

1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கை நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக எம்.பியாகவும், அமைச்சராகவும், எதிர்கட்சியாகவும், 5 முறை பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க பதவிவகித்திருக்கின்றார்.

Trending Posts