ரணில் நாடாளுமன்றம் வந்ததால் சம்பந்ததருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் 16ஆம் இலக்க ஆசனம், அதாவது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அருகே உள்ள ஆசனம் நியமிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஆசனம் மாற்றப்படுவது பற்றி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற அலுவல்கள் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பிவைத்திருப்பதாக அறியமுடிகின்றது.

அந்தக் கோரிக்கைக்கு அமைய, தற்சமயம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13ஆம் இலக்க ஆசனம் வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 13ஆம் இலக்க ஆசனத்தில் இதற்கு முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் அமர்ந்திருந்தார்.

தற்போது இரா.சம்பந்தனுக்கு அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அருகே ரணில் விக்கிரசிங்கவுக்காக ஒதுக்கப்பட்ட 16ஆம் இலக்க ஆசனம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Trending Posts