புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டமைக்காக சிறையில் உள்ள 17 பேருக்கு பொது மன்னிப்பு

சிறப்புச் செய்திகள் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டமைக்காக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 17 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நேற்று நாடாளுமன்றில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தி இருந்தார்.

இந்தநிலையில் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முறைப்படி இடம்பெறுவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts