யாழ்ப்பாணம் குருநகரின் ஒரு தொகுதி முடக்கம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள இரு கிராமசேவகர் பிரிவுகள் நேற்று மாலை தொடக்கம் முடக்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி இரு கிராமசேவகர் பிரிவுகளிலும் 70 இற்க்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து ஜே/69 , ஜே/71 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணிக்கு வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக நேற்று மாலை தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு கிராமசேவகர் பிரிவுகளிலும் சுமார் 1599 குடும்பங்களை சேர்ந்த, 4820 பேர் வசித்துவருகின்றனர்.

மேலும் குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் 2 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தொிவித்திருக்கின்றது.

Trending Posts