மன்னாரில் 1392 கிலோ மஞ்சள் கடத்தல் மூவர் சிக்கினர்

செய்திகள்

மன்னார், சிலவதுரா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில், 1392 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கொண்ட மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்து மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

சிலவத்துராவின் கடலோரப் பகுதியில் 750 கிலோகிராமும் அரிப்பு கடல் எல்லையான சிலவத்துராவில் 642 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை இலங்கைக்கு கடல் வழியாக கடத்தி வந்த மூன்று சந்தேக நபர்களையும் வட மத்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களை மன்னார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள நிலையில், சிலவத்துரா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts