பட்டதாரி பயிற்சியாளர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்பவுதற்க்கு பட்டதாரி பயிற்சியாளர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ஜனக பந்தரா தென்னகூன் தெரிவித்துள்ளார்.

பயிற்சி பட்டதாரிகளாக 2019 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 14,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சேவை அதிகாரிகளாகவும் பட்டதாரி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டுக்குள் 58,000 க்கும் மேவம்ற்பட்ட பட்டதாரிகள் பயிற்சியாளர்களாக பயிற்சிக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும்

இரண்டாம் மொழி தேர்வுக்கு பதிலாக இரண்டாவது மொழி பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் ஜனக பந்தரா தென்னகூன் தெரிவித்தார்.

பொது சேவைகள் அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதை வெளியிட்டார்.

அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி, ஆலோசகர் மஹிந்த மடிஹஹேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.