பசில் ராஜபக்ஷ ஜூலை 6 இல் அமைச்சராக பதவியேற்கவுள்ளார் பெட்ரோல் விலையும் குறைவடையவுள்ளது

சிறப்புச் செய்திகள் செய்திகள்

தனிப்பட்ட விஜயத்திற்காக அமெரிக்கா சென்று திரும்பிய பசில் ராஜபக்ஷ ஜூலை 6 செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார், மேலும் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் வட்டாரங்களின் தகவல்களின்படி, பசிலின் இரட்டை பிராஜ உரிமை தடைசட்டம் 20 ஆவது சட்ட திருத்தத்திலிருந்து நீக்கப்பட்டது, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டாரா பதவி விலகிய பின்னர் பசில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்.

2010-2015 காலகட்டத்தில் பசில் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்தார்
இம்முறை பசில் ராஜபக்ஷ பொருளாதார / நிதி அமைச்சராக மீண்டும் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவியேற்ற பின்னர், பெட்ரோல் விலை 5 முதல் 7 ரூபாயும், டீசல் விலை 3 முதல் 5 ரூபாயும் வரை குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ அதிகாரப்பூர்வமற்ற முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending Posts