பயணத்தடை தொடர்பாக ராணுவ தளபதியின் நிலைப்பாடு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பயணத் தடைகள் நீக்கப்பட்டாலும் அடுத்த சில வாரங்கள் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பது கட்டாயமாகும் என்று ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தினசரி பதிவாகும் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், பயணக் கட்டுப்பாடுகளை அமுலாக்க வேண்டியது கட்டாயம் என அவர் கூறிப்பிட்டார்.

தினமும் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பொறுப்பு மக்களுக்கும் உள்ளது என்று ராணுவ தளபதி தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோது மக்களின் நடத்தை மிகுந்த கவலையளிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணவர்தன நேற்று தெரிவித்தார்.

Trending Posts