யாழில் இன்னும்மொரு கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டது

செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஜே/350 கிராம சேவகர் பிரிவும், மன்னார் மாவட்டத்தில் பியர் மேற்கும் மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று அதிகாலை 6 மணி முதல் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்கள் உள்ளடங்கலாக நாட்டிலுள்ள 5 மாவட்டங்களில் 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணி தொடக்கம் முடக்கப்படுவதாக இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வாக தொிவித்திருக்கின்றார்.

இதேபோல் பதுளை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம், கொழும்பு மாவட்டம் ஆகியவற்றிலும் 7 வரையான கிராமசேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி தொடக்கம் முடக்கப்பட்டிருக்கின்றது.

Trending Posts