மட்டக்களப்பு இராணுவ வாகனம் வீதியைவிட்டு விலகியதில் 2 இராணுவத்தினர் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியைவிட்டு விலகி கீழே நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன்; 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது
இதில் சென்ற இருவர் இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை நீரோடையில் இருந்து ரக்வண்டியை கரைசேர்க்கும் நடவடிக்கையில் கனரகவாகனம் கொண்டு இராணுவத்தினர் ஈடுபட்டுவருவதுடன் ஒருவரின் சடலத்தை தேடி வருகின்றனர்

Trending Posts