ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொரோனாவால் உயிரிழப்பு

சிறப்புச் செய்திகள் செய்திகள்

பேராதனை – முருதலாவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொவிட் தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளனர்

கொரோனா தொற்றுக்குள்ளான 72 வயதான தந்தை, 70 வயதான தாய் மற்றும் 38 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த மூவருக்கும், பல்வேறு தருணங்களில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளனர்.

இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மூவரும், பெனிதெனிய சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Trending Posts