ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் கிராமங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம்

செய்திகள்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோணா ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் மஜ்மா நகர் மற்றும் முகைதீன் அப்துல் காதர் கிராமங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் நேற்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பிரயாணத்தடை காரணமாக தங்களது வாழ்வாதரங்களை இழந்து மிகவும் கஸ்டத்தில் வாழ்ந்த இப்பகுதி மக்களுக்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவரும் சமுக சேவையாளருமான சாமஸ்ரீ எம்.எஸ்.எம். முபாரக் குழுமத்தினரினால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக சென்று இரு கிராமங்களையும் சேர்ந்த நூறு குடும்பங்களுக்கு உலருணவு பொதிகளை வழங்கி வைத்ததுடன் கொரோனா தாக்கத்தினால் பொருளாதாரத்தை இழந்த ஏனைய பிரதேசங்களுக்கும் உலருணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எம்.எஸ்.எம். முபாரக் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம், கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான மௌலவி எம்.ஐ.எம். ஹாமீத், ஏ.சி. அஸீஸுல் றஹீம், அல்- கிம்மா சமுகசேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஹாரூன், மஜ்மா நகர் அபிவிருத்தி குழு உறுப்பினர் மௌலவி எஸ்.டி.எம். சலாஹுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டு இந்நிவாரண பொருட்களை கையளித்தனர்.

Trending Posts