குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் கீரிமலை கருகம்பனை விழுதுகள் அமைப்பினர்

செய்திகள்

கடந்த 18 மாத காலமாக யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக மேற்படி குருதிகொடையாளர்களை இணைக்கும் திட்டம் யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் – கீரிமலை, கருகம்பனை விழுதுகள் அனைத்தும் விருட்சமே அமைப்பின் ஆயிரம்  குருதிக்கொடையாளர்களை இணைக்கும் இறுதித்திட்டம் இன்று நிறைவடைந்துள்ளது.

இத்த திட்டத்தின்  இறுதி நிகழ்வு கீரிமலை, கருகம்பனை பொதுமண்டபத்தில் நடைபெற்றது.
இக்குருதிக்கொடை வழங்கும் நிகழ்வில் இளைஞர்கள் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டமையை அவதானிக்க முடிந்தது.

மேற்படி அமைப்பானது 17 இடங்களில் குருதி கொடை முகாங்களை அமைத்து இத்திட்டத்தின் இலக்கை இன்று நிறைவு செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts