இலங்கையில் நேற்றைய தினம் 1,890 பேருக்கு கொவிட் 19

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையில் நேற்றைய தினம் 1,890 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் 1,850 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 40 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 255,508 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 31,315 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2,251 பேர் நேற்று குணமடைந்ததாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 221,249 ஆக அதிகரித்துள்ளது.

Trending Posts