கொரோனா நோயாளர்களை கடித்த நாய் : நாய்க்கு கொரொணா வருமா?

செய்திகள்

கொரோனா நோயாளர்களை நாய் ஒன்று கடித்த சம்பவம் மொரவக்க மாவட்ட வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவினுள் நடந்துள்ளது.

மொரவக்க மாவட்ட வைத்தியசாலையில் நுழைந்த நாய் ஒன்று அங்கு சிகிச்சைப் பெற்று வந்த மூன்று பேரை கடித்து குதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாய் வார்டினுள் நுழைந்தவுடன் அங்கிருந்த நோயாளர்கள் கட்டிலுக்கு மேல் ஏறி கூச்சலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் வைத்தியசாலை ஊழியர்களால் குறித்த நாய் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையினுள் நாய் வருவதை யாரும் அவதானிக்கவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் வந்து நாயினை தேடிய போதும் அது கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Trending Posts