வடக்கில் 73 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா

சிறப்புச் செய்திகள் செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் 67 பேர் உட்பட வடக்கில் 73 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் 741 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 67 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும், யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்குமாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Trending Posts