நெல்லியடியில் மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கோரோனா

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நெல்லியடியில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 34 உத்தியோகத்தர்களிடம் இன்று முன்னெடுகப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்றைய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் மாதிரிகளை வழங்கியிருந்தார்.

அவற்றில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.

அதனால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 34 உத்தியோகத்தர்களிடம் இன்று அன்டிஜன் பரிசோதனை முன்னெடுகப்பட்டது.

அதில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Trending Posts