மாவையின் தலைமையில் வெடித்தது போராட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று யாழ் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

எரிபொருள் விலையேற்றம், விவசாயிகளுக்கான பசளை தட்டுப்பாடு, அரசியல் கைதிகளின் விடுதலை , கப்பல் விபத்தினால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வெளிநாட்டவர்கள் ஆக்கிரமிப்பு மற்றும் தமிழர்களின் காணி விடுவிப்பு போன்றவற்றினை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆரம்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடி எரிபொருள் விலையேற்றத்தினை வெளிப்படுத்தும்  வகையில் துவிச்சக்கர வண்டியில் தங்களுடைய பயணத்தினை ஆரம்பித்து கோஷங்கள் எழுப்பியவாறு வலி தென்மேற்கு பிரதேச சபை வரைக்கும் பேரணியாக சென்றிருந்தனர்.

தொடர்ந்து வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிசோர், வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts