கொக்குவிலில் வன்முறைக் கும்பல் அட்டகாசம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

கொக்குவில் மேற்கு பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கிருந்த பெறுமதியான பொருளிகளை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Trending Posts