கைது செய்யப்படுவார்களா தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

செய்திகள் முக்கிய செய்திகள் 3

சாதாரணமாக மக்கள் வெளியிடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும்போது கைது செய்யப்படுகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் அவ்வாறு நினைவுகூர்பவர்கள் ஏன் கைது செய்யப்படாதிருக்கின்றார்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பு கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் நடந்தது.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அரசாங்கப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல சரியான பதிலை அளிக்கவில்லை.

எனினும் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைவுகூர்ந்திருந்தால் அதுபற்றி சபாநாயகரே நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் பதில் அளித்திருக்கின்றார்.

Trending Posts