பசில் ராஜபக்ஷ அமைச்சராக நியமிக்கப்படுவாரா? அரசாங்கத்தின் அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பசில் ராஜபக்ஷ அமைச்சராக நியமிக்கப்படுவாரா? என்பது தொடர்பாக இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறுமா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் எனவும்,

மேலும், பஸில் ராஜபக்ஸ எவ்வாறு நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்வார், அவருக்கு என்ன பதவிகள் வழங்கப்படும் என்பவை முற்று முழுதாக ஆளுங்கட்சியின் உள்ளக விவகாரமாகும்.

இது தொடர்பில் சரியான முறையில் தீர்மானங்களை எடுத்து அதனை நாம் அறிவிப்போம்.

மக்கள் மத்தியில் இது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டாலும், கட்சி ரீதியில் ஸ்திரமான தீர்மானத்தை எடுத்த பின்னரே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்..

Trending Posts