10 வாரங்களுக்குள் டெல்டா கொரோனா வைரஸின் திரிபு பரவும் அபாயம்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

மக்கள் சரியான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றத் தவறினால், இன்னும் 10 வாரங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வியாபிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் வைரஸ் தொடர்பான நிபுணர்களால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தற்போது டெல்டா வைரஸ் குறிப்பிட்ட சிலரிடம் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

நாட்டில் நடமாட்டத்தடை நீக்கப்பட்டாலும், இன்னும் முழுமையாக நாடு திறக்கப்படவில்லை.

மக்கள் ஒன்று கூடுவதற்கும், விருந்துபசாரம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை நிலவுகிறது.

இந்தநிலையில் மக்கள் மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வீணாக வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

அல்லாத பட்சத்தில் டெல்டா திரிபு மிக வேகமாக இலங்கை முழுவதும் பரவக்கூடும்.

இந்த வைரஸ் திரிபானது மிகவும் ஆபத்தானது என்று சர்வதேச அளவில் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

Trending Posts