புகையிரத ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்

செய்திகள்

இன்று (30) காலை 8 மணி முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக புகையிரத இன்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது தொடர்பான வேலைதிட்டத்தை வௌிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், உரிய பதில் கிடைக்காததால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் புகையிரத பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.