வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நீர்த்தேக்கங்கள் அபிவிருத்தி கூட்டம் யாழில்

செய்திகள்
கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரட்ண யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொண்டிருந்தார்.

யாழ் மாவட்டத்தில் "வாரி சௌபாக்கியா நீர்ச் செழுமை"  செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய நீர்ப்பாசன அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று இன்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்றிருந்தது.

இந்த கூட்டத்தில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் , மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts