பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவாரா?

செய்திகள்

பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதற்கான குறிப்பிட்ட திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியிலுள்ள உறுப்பினர்கள்கூட ஒவ்வொரு திகதிகளை பஸில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற மீள்வருகைக்காகத் தெரிவித்து வருகின்றனர். எனினும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவர் விலகிய பின்னரே அதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும் இதுகுறித்து பஷில் ராஜபக்ஷவுடன் அடுத்த வாரத்தில் கலந்துரையாடப் போவதாகவும் பிரதமர் மஹிந்த கூறியுள்ளார்.

Trending Posts