2015ஆம் ஆண்டு தீர்மானத்தை சர்வதேச நீதிப்பொறிமுறையிடம் கையளிக்க வேண்டும் – வடமாகாண சபை கோரிக்கை

செய்திகள்

ஐ.நா பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசு தான் ஒப்புக்கொண்டவாறு வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் இவ்விடயத்தை சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றிடம் கையளிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐ.நா மனித உரிமை பேரவையிடம் கடந்தவாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் மேற்குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின ;ஆணையாளாருக்கு வடமாகாண சபை அவைத்தலைவரால் குறித்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 'மீள்நல்லிணக்கம், பொறப்புக்கூறல், மற்றும் இலங்கையில் மனித உரிமைகளை உயர்த்துதல்' என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானத்துக்கு, இலங்கை இணை அனுசரணையாக இருந்தமை மற்றும் அதற்கு கையெழுத்திட்டமையை நினைவுபடுத்தியும், சர்வதேச மனித உரமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை, துஷ்பிரியோகம் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென சிறப்பாக அமைக்கப்பெறும் மன்றினூடாக ஓர் நீதிப்பொறிமுறை ஏற்படுத்தப்படுமென இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதுடன், சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய மதிப்புமிக்க நடுநிலையான மற்றும் தன்னிலை பிறளாதவர்கள் என சர்வதேசம் ஏற்றக்கொண்ட நபர்களின் தலைமையிலான சுயாதீனமானதும், வழக்கு தொடுநர் நிறுவனங்களை உள்ளடக்கிய சர்வதேச தரத்திலான நீதி செயற்பாட்டை உத்தரவாதப்படுத்தியிருந்தமை மற்றும் பொதுநலவாயத்தின் சிறப்பு நீதிச்சபை அலுவலகம், ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், வாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் அதிகாரமளிக்கப்பட்ட வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்கள் உள்ளடங்கலான இலங்கையில் நீதிப்பொறி முறையின் பங்களிப்பின் முக்கியத்துவமும் இவ்விடயத்தில் உறுதியாக்கப்பட்டமையை நினைவுபடுத்தியும், இலங்கை அரசுதான் பக்கச்சார்பற்ற, சர்வதேசம் ஏற்றுக்கொள்ளத்தக்க பொறிமுறையை நிறுவுவதாக ஒப்புக்கொண்டு வாக்குறுதி கொடுத்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதை அக்கறையுடன் நோக்கி, பொரும்பான்மையான வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணைகளை கொண்டிராத உள்நாட்டு நீதிப்பொறி முறையிலும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அங்கிகரித்து வடக்கு மாகாண சபை பின்வரும் தீர்மானத்துக்கு வருகிறது

2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசால் இணை அனுசரணை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த போதிய நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்வில்லை,

குறிப்பாக பொறுப்புக்கூறல், உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுதல், மீள்நல்லிணக்கம், அடக்குமுறைகள், மீள்நிகழாமை நிலங்கள் சட்டரீதியாக உரிமையாளர்களிடம் மீளகையளித்தல் மற்றும் இழப்பீடுகள் விடயங்களில் போதிய நடவடிக்கை இல்லை. இலங்கை ஏற்றுக்கொண்டு வாக்குறுதியளித்த ஐ.நா மனித உரிமை பேரவைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒப்புக்கொண்டதானதும் ஏற்புடையதானதுமான நீதிச் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்க அர்த்தமுள்ள நடவடிக்கை எதனையும் மேற்கொள்வில்லை.

இலங்கை அரசு தான் ஒப்புக்கொண்ட தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததனால் அல்லது நிறைவேற்றவிருப்பமின்றி உள்ளதால் இவ்விடயத்தை சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றுக்கு கையளிக்க வேண்டும் என்று இச்சபை ஐ.நா மனித உரிமை பேரவையிடம் கேட்டுக்கொள்கிறது.

உண்மை நீதி மற்றும் நியாயமான அரசியல் தீர்வின்றி இலங்கையில் மீள்நல்லணக்கமோ நிரந்தர அமைதியோ இலங்கையில் சாத்தியமில்லை என்பதை இச்சபை வலியுறுத்தி கூறுகிறது. இலங்கை சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும், கோரும் நியதிச்சட்டத்தை ஏற்று கையெழுத்திட வேண்டும் என்றும் 2015 வெளியிடப்பட்ட ஐ.நா மனித உரிமை பேரவையினால் பரிந்தரைக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டவற்றை இலங்கை நடைமுறைப்படுத்தவும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை காண்பதற்கு ஐ.நா மனித உரிமை பேரவையும் சர்வதேச சமூகத்தையும் இச்சபை கோருகிறது.

மேலும் இலங்கையில் நிலரீதியாக தொடந்த பிரச்சினையான, வடக்கு கிழக்கு மாகாணங்களை பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனமாகும். அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் குறைந்தபட்சம், இணைந்த வடக்குக் கிழக்கு முழுமையான கூட்டாட்சியை (சமஷ்டி) அரசியல் யாப்பில் வெளிப்படையாக பிரகடனப்படுத்தும் வகையிலான தீர்வை இலங்கை அரசு வழங்க முன்வர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.