ஊடகவியலாளர் பிரகாஸ் அவர்களின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது.

செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஊடகவியலாளர், எழுத்தாளர் தம்பி ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களின் பூதவுடல் இன்று காலை தீயுடன் சங்கமமானது.

கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது.

கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) கடந்த வாரம் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. அத்துடன் அவரது அஸ்தி அல்லாரை புதிய செபமாலை அன்னை தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுயாதீன ஊடகவியலாளரான, பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார். அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.