சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு விசேட நிவாரணங்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை இனங்கண்டு அதற்காக வழங்கக்கூடிய நிவாரணத்தை பரிந்துரை செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று (06) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் முகங்கொடுத்துள்ள இடர்பாடுகளை அடையாளங்கண்டு அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தொடர்பான தரவுத் தொகுதியொன்றை தயாரித்துக் கொள்வதற்கும் பொறிமுறையொன்றை முன்மொழிவதற்கும், உத்தியோத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்காகவும் 2020 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொவிட்-19 பெருந்தொற்று நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு உகந்த சலுகைகள் தொடர்பாக குறித்த உத்தியோகத்தர் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.