யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவி என காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

எனினும் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.