யாழில் சம்பள உயர்வு வேண்டி அதிபர் ஆசிரியர்கள் போராட்டம்

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 1

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்கும் படியும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறு வேண்டியும் உலக ஆசிரியர் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்றது.

இன்று முற்பகல்-10 மணியளவில்

வடமாகாண கல்வியமைச்சுக்கு முன்பாகவும் யாழ்ப்பாண

வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில்

கல்வி நெருக்கடிக்கு தீர்வு வழங்கு,

24 வருட ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, இலவச கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய் ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது

கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதிபர்கள் ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.