84ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி ஆர்ப்பாட்டம்

செய்திகள்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 84ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும், தமக்கான நியாயமான தீர்வு கிடைக்கும் வரை குறித்த போராட்டத்தை கைவிடப் போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.