உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு

உலகச் செய்திகள்

கொழும்பு, ஜனவரி 27: உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அண்டை நாடான உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் நிறுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய அச்சுறுத்தலை தடுக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் அடுத்த மாதம் மத்தியில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் புடின் திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அவரது நடவடிக்கையை தடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி நடுப்பகுதியில் உக்ரைனுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்த புடின் தயாராக இருக்கிறார் என்பதை அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டு தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் இறுதி முடிவை எடுத்தாரா என்பது தெரியாது, ஆனால் அவர் இராணுவப் பலத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்பதற்கான எல்லா அறிகுறிகளையும் நாங்கள் நிச்சயமாக பார்க்கிறோம். ஒருவேளை அது இப்போது இருக்கலாம் அல்லது பிப்ரவரி நடுப்பகுதியில் இருக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் கூறியுள்ளார்.

Trending Posts