இலங்கைக்கு மேலும் இரு பதக்கங்கள்!

முக்கிய செய்திகள் 2

தென்கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் தருஷி கருணாரத்ன மேலும் ஒரு பதக்கத்தை வென்றுள்ளார்.

800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தருஷி கருணாரத்ன நேற்று (04) இடம்பெற்ற 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, ஆடவர் முப்பாச்சல் போட்டியில் இலங்கை வீரர் மலித் யசிரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் ஜப்பானின் மியாவோ மனாடோ தங்கப் பதக்கத்தையும், சீனாவை சேர்ந்த மா யிங்லாங் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.