அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் ஆா்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரால் நீா்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த நீா்த்தாரை மற்றும் கண்ணீா்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆா்ப்பாட்ட பேரணி காரணமாக விஜயராம சந்தியில் இருந்து ஜயவா்தனபுர பல்கலைக்கழகம் வரையான வீதி மூடப்பட்டுள்ளது.
பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.