பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘பிரிக்கப்படாத இந்தியா’ சுவரோவியம்

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 'பிரிக்கப்படாத இந்தியா'வை சித்தரிக்கும் சுவரோவியம் தொடர்பாக பல்வேறு நாடுகளும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

இந்திய தலைநகர் புது டெல்லியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் திறந்து வைத்தார்..

இந்த புதிய கட்டடத்தில் 'பிரிக்கப்படாத இந்தியாவை' காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் உள்ளமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரிக்கப்படாத இந்தியா சுவரோவியம் மேற்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வரை இந்தியாவின் ஒரு பகுதியாக விரிந்துள்ளதாக காட்டுகிறது.

இந்த சுவரோவியம் பண்டைய மௌரிய பேரரசைக் காட்டுவதாகவும் அது 'மக்கள் சார்ந்த' ஆட்சியின் செழிப்பான காலத்தை பிரதிபலிப்பதாகவும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த சுவரோவியத்துடன் எவ்வித அரசியல் தொடர்பும் இல்லை என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.