உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.25 கோடியாக உயர்வு

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

வாஷிங்டன்,ஜுன் 10

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர், 228 நாடுகளின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

எனினும், ஊரடங்கு, கொரோனா தடுப்பூசி உள்பட பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்புகள் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்து 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 25 லட்சத்து 81 ஆயிரத்து 201 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 90 ஆயிரத்து 174 பேர் உயிரிழந்துள்ளனர்.