அமேசான் காட்டில் 40 நாட்கள் சிக்கித் தவித்த 4 குழந்தைகள்; உயிருடன் மீட்கப்பட்டது எப்படி?

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

கொலம்பியா நாட்டில் அமேசான் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தப்பித்த குழந்தைகள் நான்கு பேர் அடர்ந்த வனப்பகுதியில் தொலைந்துபோன நிலையில் 40 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

குழந்தைகள் நான்கு பேரும் உயிருடன் மீட்கப்பட்டதை கொலம்பிய நாட்டு ஜனாதிபதி
கஸ்டாவோ பெட்ரோ உறுதி செய்துள்ளார். அமேசான் மழைக்காடுகளின் அடர்த்தியான பகுதிகளில் சிக்கிய அந்த நான்கு குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதற்காக அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியும் அரசுக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி பெட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில், “கொலம்பிய காடுகளில் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் மாயமான குழந்தைகள் 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தேசத்திற்கான மகிழ்ச்சி செய்தி” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட பூர்வக்குடிகள் மற்றும் இராணுவத்தினரின் புகைப்படங்களையும் அதிபர் பெட்ரோ டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மீட்கப்பட்ட 4 குழந்தைகளும் அந்தத் தருணத்தில் மிகவும் சோர்ந்துபோய், அச்சத்துடன் காணப்பட்டனர் என கூறியுள்ள அவர் , இருப்பினும் அந்த 4 குழந்தைகளும் மனிதர்கள் எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையேயும் வாழ முடியும் என்பதற்கான முன் உதாரணமாக, அடையாளமாக இருப்பார்கள். அவர்களின் கதை வரலாறாகும் எனத் தெரிவித்துள்ளார்.