
பேராதனை பல்கலைக்கழகத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூலை முதாலம் திகதியை திறந்த நாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழகத்திற்கு பொதுமக்களை அனுமதிப்பதற்கு பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
வரலாற்றில் ஒரு பல்கலைக்கழகம் பொதுமக்களின் சார்பில் திறந்த நாள் தினத்தை அறிவித்தது இதுவே முதல் முறை.
பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஆய்வு நடைமுறைகள், சுற்றுச்சூழல் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் ஜூலை 1 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.