காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இன்று பிற்பகல் 2 மணி முதல் காலி வீதி – தெல்வத்தை சந்தியில் இருந்து சீனிகம வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்வத்த – ரத்பாத் ரஜமஹா விகாரையின் மிஹிந்து பெரஹெர வீதி உலா காரணமாக இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெல்வத்தை மற்றும் சீனிகம வரையான பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை குறைப்பதற்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.