
கொஸ்கொட பிரதேசத்தில் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது .
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருட்கள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதை பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப் பொருட்களை வைத்திருந்த இளைஞர்கள் இருவரும் கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பகுதியில் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட போதை பொருட்களில் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் தொகை இதுவாகும் எனவும் கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.