அனுராதபுரத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

முக்கிய செய்திகள் 1

அனுராதபுரம் நகருக்கு அருகில் உள்ள ஹால்பானு கால்வாயில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் கொஹொம்பகஸ் சந்தி பகுதியினூடாக பாயும் ஹால்பானு கால்வாயில் மீட்கப்பட்ட குறித்த பெண் உயிரிழந்து சுமார் 5 நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பெண்ணின் சடலம் உருக்குலைந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஹால்பானு கால்வாய் பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் தேடிய போது சடலத்தை கண்டுள்ளார்.

பின்னர் அப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்த விவசாயி இது குறித்து அநுராதபுரம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்னதுள்ளார்.

Trending Posts