கேப்பாப்புலவில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் – இரா. சம்பந்தன்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கேப்பாப்பிலவில் இராணுவ முகாம் அமைந்துள்ள 432 ஏக்கர் காணி ஒரு மாதத்தில் விடுவிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்களுடனான சந்திப்பின் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்கு சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ள நிலையில் இராணுவ ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கு எவ்வித சிக்கலும் இல்லை எனவும், தற்போது பாதுகாப்புப் படையினர் தங்கியுள்ள காணிகளை விடுவிக்கும் பட்சத்தில், அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றீடு செய்வதற்கு பணம் தேவைப்படுவதாகவும், ஐந்து மில்லியன் ரூபா பணம் கிடைக்கும் பட்சத்தில் காணிகளை விட்டு மாற்றிடங்களுக்கு செல்லத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.