விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட ஜீப் சாரதிகள் தொடர்பில் தகவல்கள்!

முக்கிய செய்திகள் 1

மின்னேரியா தேசிய பூங்காவில் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட ஜீப் சாரதிகள் தொடர்பான தகவல்களை வனஜீவராசிகள் திணைக்களம் பெற்றுள்ளது.

குறித்த இரண்டு ஜீப்களும் மீண்டும் பூங்காவுக்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட சாரதிகளை கைதுசெய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்னேரியா தேசிய பூங்காவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, யால தேசிய பூங்காவில் வன விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை செலுத்திய சம்பவம் பதிவாகியிருந்தது.

துரதிர்ஷ்டவசமாக, இதேபோன்ற மற்றொரு சம்பவம் மின்னேரியா தேசிய பூங்காவில் இருந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.