கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு – 12 பேர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிளிநொச்சி, கல்லாறு காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 12 பேரை நேற்று தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீண்டகாலமாக சட்டவிரோதமாக நடைபெற்றுவரும் இம்மணல் அகழ்வு மற்றும் வியாபாரம் பற்றி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம், தருமபுரம் பொலிஸார் மற்றும் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் இணைந்து சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போதே, சந்தேகநபர்களை கைதுசெய்த பொலிஸார், மணல் ஏற்றிச் சென்ற வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் நிர்மாணிப்பதற்கென கூறியே நீண்டகாலமாக இம்மணல் வியாபாரம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.