சுவீடன் தூதுவரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

செய்திகள்

இந்தியா, பூட்டான், மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹெரால்ட் சான்பர்க்கை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர், சுவீடன் தூதுவருக்கு விளக்கமளித்ததுடன், அத்துடன் வடக்கு கிழக்கில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.