நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுகிறது – விஜயகலா மகேஸ்வரன்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது. நல்லாட்சி அரசாங்கமானது இன, மத, பேதமின்றிச் செயற்பட வேண்டுமென சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், நல்லாட்சி அரசாங்கமானது இன, மத பேதமின்றிச் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

வல்வை ஆழிக்குமரன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகமொன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், யுத்தம் காரணமாக எமது இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாத நிலைமை நிலவியது. தற்போது நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளமையால் எமது இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தில் வீர சாதனைகளை ஆழிக்குமரன் ஆனந்தனைப் போன்று படைக்க வேண்டும்.

வடக்கில் யுத்தம் காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, உப்பளம், உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இவற்றைத் திறப்பதற்கு நிதி அமைச்சு புதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கவேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அரசுக்கு எதிராக இனவாதம் தூண்டப்படுகின்றது. கடந்த அரசாங்க காலத்தில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. தவிர அவை மீளவும் வழங்கப்படவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் மக்களின் காணிகளை மீள வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் 3,000 ஏக்கர் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.