அமெரிக்காவிலிருந்து திரும்பும் விமானங்களில் மடிக்கணனிகளுக்குத் தடை

உலகச் செய்திகள்

அமெரிக்கா சென்று திரும்பும் அனைத்து விமானங்களிலும் மடிகணனி கொண்டுச் செல்ல விரைவில் தடைவிதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜோன் கெல்லி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள சகல விமான நிலையங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அமெரிக்கா வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்க மக்கள் உள்ள விமானங்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் துருக்கி ஆகிய 10 விமான நிலையங்களில் இருந்து மடிக்கணனிகளை எடுத்துவர அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.